பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ், மற்றும் லெமன் லீப் கிரியேசன்ஸ் கணேசமூர்த்தி இணைந்து தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் துவங்கியது.
கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட இந்த படத்தில் அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன் , திவ்யா துரைசாமி, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
தமிழகத்தின் நகரங்கள், ஊர்களில் கிரிக்கெட் விளையாட்டின் உணர்வுப்பூர்வமான ஒரு வாழ்வியலையும், நட்பு, கொண்டாட்டங்களையும் அனைவரும் ரசிக்கும் படியான கதையுடன் இப்படம் அமைய உள்ளது.
இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய ஜெய்குமார் இந்த படத்தை இயக்குகிறார்.
‘O 2, தம்மம்’ படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய தமிழழகன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
அரக்கோணம் சுற்று வட்டாரப் பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடக்க உள்ளது.