மே 19-ல் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’

இயக்குனர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனம் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க, ஐக் இயக்கத்தில், ஜீவா, ஸ்ரீ திவ்யா, சூரி, ராதிகா சரத்குமார், ராதாரவி மற்றும் பலர் நடித்துள்ள ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்துக்கு தணிக்கைக் குழுவினர் UA சான்றிதழ் வழங்கி உள்ளனர்.

“கோடை கால விடுமுறைக்கு ஏற்றவாறு ரசிகர்களுக்கு உற்ற விருந்தாக ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ அமையும். வர்த்தக ரீதியான விஷயங்களை கோர்வையாக்கி ரசிகர்களுக்கும், திரையுலகத்தினருக்கும் மிகச் சிறந்த படமாக வழங்கி இருக்கிறோம். ரசிகர்கள் அச்சப்பட்டும், அதே சமயம் தீவிர நகைச்சுவை தாக்குதலுக்கும் உள்ளாவார்கள் என்பது உறுதி,” என்கிறார் படத்தின் இயக்குனர் ஜக்.

‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ மே மாதம் 19ம் தேதி வெளியாகிறது.

Read Previous

எனக்குக் கிடைத்த கடவுள் ராஜ்கிரண் – கஸ்தூரிராஜா

Read Next

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ‘மாட்டுக்கார வேலன்’

Most Popular