ஜி.வி.பிரகாஷ்குமார் நடிகராகிறார் ?

     தாண்டவம் திரைப்படத்தின் மூலம் 25வது படத்திற்கு இசையமைத்த பெருமையப் பெற்ற ஜி.வி.பிரகாஷ்குமார் விரைவில் நடிகராகவும் வாய்ப்பிருக்கிறது. தற்போது இயக்குனர்கள் வெற்றிமாறன், விஜய் இயக்கும் படங்கள் உட்பட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஜி.வி.

‘எங்கேயும் எப்போதும் ’ படத்திற்குப் பிறகு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் , அவருடைய உதவியாளர் ராஜசேகர் இயக்கும் கதை ஒன்றை கேட்டிருக்கிறார். அந்த கதைக்குப் பொருத்தமான ஒரு நாயகன் கதாபாத்திரத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமாரை நடிக்க கேட்டிருக்கிறார்கள்.

இசையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அந்த கதை இரு நாயகர்கள், இரு நாயகிகள் நடிக்கும் படமாக அமைந்துள்ளது. ஒரு நாயகனின் கதாபாத்திரம் இசை சம்பந்தமானது என்பதால் அதில் ஜி.வி. நடித்தால் பொருத்தமாக இருக்கும் என இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும், ராஜசேகரும ஒன்றாக யோசித்திருக்கிறார்கள்.

இது சம்பந்தமாக ஜி.வி.பிரகாஷ்குமாரிடமும் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார்கள். இது சம்பந்தமாக யோசித்து சொல்வதாக பதிலளித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.

சமீபத்தில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் என்பதும், தற்போது அவர் இரண்டு படங்களில் நடிக்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Read Previous

வேடிக்கையான செய்திகள் – சமந்தா

Read Next

‘கடல்’ – 7 நாட்கள் மட்டுமே…

Most Popular