‘கடல்’ – 7 நாட்கள் மட்டுமே…

    மணிரத்னம் தற்போது இயக்கி வரும் ‘கடல்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஏழு நாட்களில் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் மகன் கௌதம், ராதா மகள் துளசி இருவரும் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள்.

 ‘கடல்’ படத்திற்குப் பிறகு மணிரத்னம் – ஐஸ்வர்யா ராய் இருவரும் இணைந்து பணியாற்றப் போவதாக ஒரு தகவல் கடந்த சில நாட்களாக மீடியா வட்டாரங்களில் பரவி வந்தது. ஐஸ்வர்யா குழந்தை பெற்ற பிறகு மீண்டும் நடிக்க வரும் படமாக இது அமையும் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால், மணிரத்னம் தற்போது கடல் படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் பிஸியாக இருப்பதாகவும், இந்த படத்தின் வெளியீட்டிற்குப் பிறகே அவர் அடுத்த படத்தைப் பற்றி சிந்திப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

ராவணன் படத்தின் தோல்விக்குப் பிறகு மணிரத்னம் மிகவும் பார்த்து பார்த்து ‘கடல்’ படத்தை உருவாக்கி வருவதாக கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Previous

ஜி.வி.பிரகாஷ்குமார் நடிகராகிறார் ?

Read Next

‘கட்’ செய்யப்பட்ட தாண்டவம்

Most Popular