கடந்த வெள்ளியன்று வெளியான ‘தாண்டவம்’ திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்பது திரையரங்குகளுக்குச் சென்று பார்த்தாலே தெரியும்.
கடந்த சில நாட்களாக உலகெங்கும் வெற்றி என்று விளம்பரப்படுத்தினாலும், உலகெங்கும் இந்த படத்திற்கு ஒரே விதமான, அதாவது குறைந்த அளவு வரவேற்பே கிடைத்துள்ளது என நமக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு படம் வெளியான பின்பு , நீளம் கருதி அப்படத்தின் சில காட்சிகள் வெட்டப்படுவதிலிருந்தே அந்த படத்திற்கு எந்த மாதிரியான வரவேற்பு கிடைத்துள்ளது என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ளலாம்.
தற்போது, தாண்டவம் படத்தின் 10 நிமிட அளவிலான காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
விக்ரம் இந்த படத்தில் சிறப்பாக நடித்திருந்தாலும், படம் விறுவிறுப்பாக அமையாதது அவருடைய ரசிகர்களிடத்திலும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.
வெறும், வார்ததை ஜாலத்தால் மட்டும் எந்த படத்தையும் வெற்றி பெற வைக்க முடியாது என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குப் புரிந்தால் சரி. ஏற்கெனவே முகமூடி திரைப்படமும் இப்படி ஓவராக பேசியதால்தான் மூன்றே வாரங்களில் மூட்டை கட்டிக் கொண்டது என்பது ரசிகர்களுக்குத் தெரிந்த ஒன்றுதான் .