அழகான, திறமையான நடிகையாக இருந்தாலும் ஒரு படத்தின் வெற்றிதான் அந்த நடிகைக்கு கிடைக்கும் வரவேற்பை அதிகப்படுத்துகிறது என்பதற்கு சமீபத்திய உதாரணம் தீக்ஷா சேத்.
ராஜபாட்டை என்ற மாபெரும் தோல்விப் படத்தில் நடித்ததால் தமிழ்த் திரையுலகம் அவரை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது.
“ ஆரம்ப காலங்களில் ஒரு நடிகைக்கு கிளாமரான ரோல்கள் கிடைப்பது எளிதாக அமைந்து விடுகிறது. ஆனால் , எனக்குள் இருக்கும் நடிகையை இதுவரை யாரும் பார்க்கவில்லை.
உதாரணமாக, ‘அருந்ததி ’ படம் வந்த பிறகுதான் அனுஷ்கா வெளியே தெரிந்தார். ‘ஜப் வி மெட்’ படம் வெளிவந்த பிறகுதான் கரீனா கபூர் தெரிந்தார். அப்படி திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களுக்காக நான் காத்திருக்கிறேன்.
இப்படிப்பட்ட திறமையை வெளிப்படுத்தக் கூடிய கதாபாத்திரங்களை எனக்குக் கொடுத்துப் பாருங்கள், என்னுடைய உண்மையான திறமை என்ன என்பது உங்களுக்குத் தெரியும்,” என்கிறார் தீக்ஷா சேத்.
தமிழ்த் திரையுலக இயக்குனர்களே இதோ உங்களுக்கு சவால் விடும் திறமையான நடிகை ரெடி.