வேடிக்கையான செய்திகள் – சமந்தா

   டந்த சில மாதங்களாகவே நடிகை சமந்தாவைப் பற்றிய வதந்திகளுக்கு அளவேயில்லாமல் போயிருந்தது. அவருக்கு உடலில் ஏதோ பிரச்சனை என்றும், விளக்கு வெளிச்சத்தின் முன்னால் நின்று அவரால் நடிக்க முடியாது என்றும் மீடியாக்களில் பரபரப்பாக செய்திகள் வந்தன.

மணிரத்னத்தின் ‘கடல்’ படத்திலிருந்தும், ஷங்கரின் ‘ஐ’ படத்தில் ஒப்பந்தமாகி நீக்கப்பட்டார் என்றும் வந்த செய்திகள்தான் மிகவும் பரபரப்பாக அமைந்தன. இப்படி இரு பெரும் இயக்குனர்களின் படங்களில் ஏன் நடிக்காமல் போனார் என திரையுலகமே ஆச்சரியத்தில் இருந்தது.

தற்போது இந்த செய்திகளைப் பற்றி கருத்து சொல்லியிருக்கிறார் சமந்தா. “என்னைப் பற்றி மீடியாக்கள் யூகங்களாக எழுதிய செய்திகளைப் படித்த போது எனக்கு அவற்றைப் படிக்க வேடிக்கையாகவே இருந்தது. உறவுகள், உடல் பிரச்சனைகளைப் பற்றி எழுதும் செய்திகளைப் பற்றி பேசுவது சரியாக இருக்காது என்றும் நினைக்கிறேன்”.

“தற்போது எந்த புதுப் படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. அடுத் சில மாதங்களில் நான் நடித்துள்ள நான்கு படங்கள் அடுத்தடுத்து வரவுள்ளன. முதலில கையிலிருக்கும் படங்களை முடித்துக் கொடுத்து விட்டுத்தான் அடுத்து நடிக்கப் போகும் படங்களைப் பற்றி முடிவெடுப்பேன்”, என்றார் சமந்தா.

கௌதம் மேனன் இயக்கத்தில் சமந்தா , ஜீவாவுடன் நடித்துள்ள ‘நீதானே என் பொன்வசந்தம்’ அடுத்த சில மாதங்களில் வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Previous

நல்ல பெயர் வேண்டும் – காஜல் அகர்வால்

Read Next

ஜி.வி.பிரகாஷ்குமார் நடிகராகிறார் ?