சூர்யாவுடன் ‘மாற்றான்’, விஜய்யுடன் ‘துப்பாக்கி’ படங்களில் நாயகியாக நடித்து வருபவர் காஜல் அகர்வார். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளிவருவதன் மூலம் தமிழில் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவராக இடம் பிடிக்க நிறையவே வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் பணத்தை விட பெயர்தான் வேண்டும் என்கிறார் காஜல் அகர்வால். கஷ்டப்பட்டு உழைக்கும் போது கிடைக்கும் பணத்தை விட, அதற்காக ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் பெயர்தான் அதற்கான உண்மையான வெகுமதி என்கிறார்.
தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆர்., ராம் சரண், ரவி தேஜா ஆகியோருடன் நடித்து வருகிறார்.
இவர் நாயகியாக நடித்திருக்கும் மாற்றான் விரைவில் வெளிவர இருக்கிறது.