எஸ். மதன் வழங்கும் வேந்தர் மூவீஸ் தயாரித்து வரும் படம் ‘தில்லு முல்லு’. பத்ரி இயக்கத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் – யுவன்ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கிறார்கள். சிவா, இஷா தல்வார், பிரகாஷ் ராஜ், கோவை சரளா, சூரி, சத்யன், இளவரசு, மனோபாலா, சச்சு மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது. துபாய், அபுதாபி, அர்ஜீனியா பார்டர் போன்ற இடங்களில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
வாலி எழுதிய ‘செக்கச் சிவந்த செர்ரி பழத்தில், லிக்கர் விழுந்ததா …’, என்ற பாடலும், எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடி கவிஞர் கண்ணதாசன் எழுதிய ‘ராகங்கள் பதினாறு உருவான வரலாறு…’ பாடலும் அந்த இடங்களில் படமாக்கப்படுகிறது. பிரேம் ரஷீத் நடனம் அமைக்க, சிவா, இஷா தல்வார் இப்பாடல் காட்சிகளில் நடிக்கிறார்கள்.
மீண்டும் டிசம்பர் மாதம் முதல் சென்னையில் படப்பிடிப்பு துவங்கி, ஜனவரி மாதத்தில் முழு படப்பிடிப்பும் முடிவடைகிறது.