டிச. 1ல் ‘மூன்று பேர் மூன்று காதல்’ இசை…

     ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு வசந்த் இயக்கும் படம் ‘மூன்று பேர் மூன்று காதல்’. சேரன், அர்ஜுன், விமல், பானு, புதுமுகங்கள் சுர்வீன், லாசினி நடிக்கிறார்கள்.

யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீடு டிசம்பர் 1ம் தேதியன்று நடைபெற உள்ளது. இப்படத்திற்காக யுவன் 6 இனிமையான பாடல்களை உருவாக்கியுள்ளார். நா. முத்துக்குமார் பாடல்களை எழுதியுள்ளார்.

‘காதல் எந்தன் காதல்…’,  ‘மழை மழை…’,  ‘உனக்காகவே உயிர் வாழ்கிறேன்…’,  ‘பட படக்குது மனமே…’,  ‘ஆஹா..காதல் கொஞ்சி…’,  ‘ஸ்டாப் த பாட்டு…’ என அருமையான ஆறு பாடல்கள் படத்தில் இடம் பெற்றுள்ளன.

தன்னுடைய படங்களில் இடம் பெறும் அனைத்து பாடல்களையும் ஹிட்டாக்கும் விதத்தில் அமைப்பவர் இயக்குனர் வசந்த். அது இந்த படத்திலும் தொடர்கிறது.

Read Previous

துபாயில் ‘தில்லு முல்லு’

Read Next

ஜனவரி 11ல் விஸ்வரூபம் ரிலீஸ்