நடிகை தேவயானிக்கு ‘எவர் கிரீன் ஸ்டார்’ என்ற பட்டத்தைக் கொடுத்திருக்கிறார் அவரது கணவர் இயக்குனர் ராஜகுமாரன்.
‘நீ வருவாய் என’, ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’ , ‘காதலுடன்’ படங்களைத் தொடர்ந்து ஏறக்குறைய ஒன்பது வருடங்கள் கழித்து ராஜகுமாரன் இயக்கி வரும் படம் ‘திருமதி தமிழ்’.
இந்த படத்தை இயக்கி , நாயகனாகவும் அறிமுகமாகிறார் ராஜகுமாரன். இந்த படத்தில் தேவயானி, கீர்த்தி சாவ்லா ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.
இந்த படம் தேவயானியின் 75வது படம். இன்றைய காலகட்டத்தில் ஒரு கதாநாயகி நான்கைந்து படங்கள் நடிப்பதே தடுமாற்றமாய் உள்ளது. தேவயானி 75 படம் முடித்திருப்பதும், அதுவும் 75வது படத்திலும் கதாநயாகியாகவே நடித்திருக்கிறார் என்பதும் பெருமைக்குரிய விஷயம்.
இதனால் தேவயானியை பாராட்டும் விதமாக அவருடைய பெயரை படத்தின் டைட்டிலில் ‘எவர்கிரீன் ஸ்டார்’ தேவயானி என்று பட்டத்துடன் பெயரைப் போட்டிருக்கிறார் இயக்குனர் ராஜகுமாரன்.