50வது நாளில் துப்பாக்கி

    2012ன் சூப்பர் ஹிட் வெற்றிப் படங்களில் ஒன்று விஜய் நடித்த ‘துப்பாக்கி’. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான படம்.

இன்று 50வது நாளைத் தொட்டிருக்கிறது துப்பாக்கி. வெளியான ஒரு சில நாட்களிலேயே அதிக வசூலை இந்த படம் அள்ளித் தந்ததாக கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் முறையாக இணைந்த ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணிக்கு, இந்த படத்தின் மாபெரும் வெற்றி அவர்களிருவரையும் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது.

பாடல்கள் மட்டும் இன்னும் சூப்பராக அமைந்திருக்க வேண்டும் என்பது அனைவரது கருத்தாகவும் இருந்தது. ‘கூகுள்’ பாடலைத் தவிர மற்ற பாடல்கள் சுமார் ரகமாக அமைந்து விட்டது.

எப்படியோ, சென்ற ஆண்டில் வெளியான பெரிய ஹீரோக்களின் படங்களில் இந்த படத்தின் வெற்றி மட்டுமே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்றாக அமைந்தது.

Read Previous

2012ல் பேசப்பட்ட புதிய இயக்குனர்கள்…

Read Next

‘எவர் கிரீன் ஸ்டார்’ – தேவயானி