நாம் எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும், வெற்றி ஒன்றே நம்மை பேசவைக்கும் மந்திரச் சொல். தோல்வியடைந்தவனை இந்த உலகம் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. வெற்றி பெற்றவனை தலை மேல் தூக்கி வைத்து ஆடத் தவறுவதுமில்லை.
இது விளையாட்டிலும், அரசியலிலும், ஏன் சினிமாவிலும் தான் அதிகம் உண்டு.
2012ல் வெளியான நூற்றுக்கும் மேற்பட்டு வெளியான படங்களில் அறிமுகமான பல புதிய இயக்குனர்களில் ‘வெற்றி’ என்ற அளவு கோலை வைத்து பேசப்பட்ட இயக்குனர்கள் சிலரே.
அவர்களில் சிலர், ‘காதலில் சொதப்புவது எப்படி’ – பாலாஜி மோகன், ‘மதுபானக் கடை ’ – கமலக்கண்ணன், ‘அட்டகத்தி’ – பா. ரஞ்சித், ‘சுந்தரபாண்டியன்’ – எஸ்.ஆர். பிரபாகரன், ‘பீட்சா’ – கர்த்திக் சுப்புராஜ், ‘ஆரோகணம்’ – லட்சுமி ராமகிருஷ்ணன், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ – பாலாஜி தரணிதரன் ஆகியோர்.
இவர்களின் படங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தளங்களில், கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்ட படங்கள். அவரவர் கற்பனைக்கேற்றபடி இந்த கனவுத் தொழிற்சாலையில் கால் பதித்திருப்பவர்கள்.
2012ன் தமிழ்த் திரைப்படங்கள் வேறு கட்டத்துக்குக் கொண்டு சென்றவர்கள்.
இவர்கள் தவிர, கவனிக்கப்படாமல் விடப்பட்டுள்ளவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் சேர்ந்து தமிழ் சினிமாவை ‘உலகத்தின் பார்வைக்கு’ கொண்டு செல்வார்கள் என நம்புகிறோம்…