நம்பிக்கையான அறிமுகம்…சிவ கார்த்திகேயன்

      2012ன் மற்றுமொரு நம்பிக்கையான அறிமுகம் சிவ கார்த்திகேயன்.

ஒரு காலத்தில் டிவியில் இருந்து வருபவர்களை சினிமாவில் நடிக்க வைக்கவே அஞ்சிய காலம் இருந்தது. ஆனால் இன்று டிவி பலருக்கு ஒரு நுழைவு வாயிலாக இருக்கிறது.

பல புதிய இயக்குனர்கள், நடிகர்கள், பாடகர்கள் என பல அறிமுகங்கள் 2012ல்.

அவர்களில் நடிகராக அறிமுகமானவர்களில் குறிப்பிட வேண்டியவர் சிவ கார்த்திகேயன். விஜய் டிவியின் ‘அது இது எது’ மூலம் கவர்ந்தவர் ,2012ல்   அறிமுகமாகி மூன்று படங்களில் நடித்திருந்தார்.

மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, இவற்றில் இவர் ஹீரோவாக நடித்த மெரினா, மனம் கொத்திப் பறவை இரண்டு படங்களும் வியாபாரா ரீதியில் வெற்றிப் படங்களாக அமைந்தவை.

அந்த வெற்றி இவருக்கு எதிர் நீச்சல், கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களின் நாயகனாகவும் நடிக்க வைத்து விட்டது.

‘எதிர் நீச்சல்’ போட்டு சினிமா என்னும் ஏணியில் ஏறியவருக்கு 2013ன் தொடக்கம் நன்றாகவே அமையும் என எதிர்பார்க்கலாம்.

 

Read Previous

அடுத்தடுத்து ஹிட்…அடுத்தடுத்து படங்கள்…

Read Next

2012ல் பேசப்பட்ட புதிய இயக்குனர்கள்…