சினிமாவைப் பொறுத்த வரைக்கும் ஜெயிச்சால் மட்டும்தான் கவனிக்கப்படுவாங்க…அடுத்தடுத்து வாய்ப்புகளும் வரும்.
இப்படி அடுத்தடுத்து இரண்டு ஹிட் கொடுத்த நடிகை 2012ல அறிமுகமான லட்சுமிமேனன். இவங்களுக்கு அடுத்தடுத்து இரண்டு படங்கள் கிடைச்சிருக்கிறதுக்குக் காரணம் வெற்றிப் படங்கள்ல நடிச்சதுதான் .
அசத்தலான அழகு, கிளாமரான தோற்றம் இல்லாமல், குடும்பப்பபாங்கான அழகு, பக்கத்து வீட்டுப் பெண் தோற்றம் கொண்ட இவரைப் போன்று வேறு ஒருவர் தமிழ் சினிமாவில் தற்போது இல்லை.
சசிகுமாருடன் நடித்த ‘சுந்தர பாண்டியன்’ சென்ற ஆண்டின் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்ததும், உடனே தனது அடுத்த படமான ‘குட்டிப் புலி’ படத்தில் லட்சுமி மேனனை ஜோடியாக்கி விட்டார் சசிகுமார்.
சென்ற ஆண்டின் மற்றொரு வெற்றிப் படமான ‘கும்கி’யும் வெற்றிப் படமாகி விட்டதால், அறிமுக ஆண்டிலேயே இரு வெற்றிப் படங்களில் நடித்தவர் என்ற பெருமை லட்சுமி மேனனுக்கு கிடைத்து விட்டது.
இப்போது ‘மஞ்சப்பை’ படத்திலும் ஹீரோயினாக புக் செய்யப்பட்டு விட்டார்.
இதன் மூலம் 2013ம் ஆண்டில் கவனிக்கப்படும் ஒரு ஹீரோயினாக ஆகி விட்டார் லட்சுமி மேனன்.
அப்பாடா…..புது வருஷத்துல லட்சுமி கரமா ஒரு நியூஸோட ஆரம்பிச்சாச்சி….