நண்பர்கள் கவனத்திற்கு – விமர்சனம்

nanbargal kavanathirku

தயாரிப்பு – கிரீன் சேனல் என்டர்டெய்ன்மென்ட்

இயக்கம் – கே. ஜெயக்குமார்

இசை – பிரம்மா

ஒளிப்பதிவு – பால் லிவிங்ஸ்டன்

படத்தொகுப்பு – சுரேஷ் அர்ஸ்

வசனம் – பிரபாகர்

கலை – ராகுல்

நடனம் – சிவசங்கர், வினோத், தினா, பாபி ஆண்டனி

பாடல்கள் – சினேகன்

நடிப்பு – சஞ்சீவ், மனிஷா ஜித், வர்ஷன், ராஜ்கபூர், தலைவாசல் விஜய், மகாதேவன், சங்கர் மற்றும் பலர்.

வெளியான தேதி – ஜனவரி 4, 2013

ஒரு கிராமத்துக் காதல் கதையை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.  விவகாரமான நண்பனால் படத்தின் நாயகன் எப்படி ஏமாற்றப்படுகிறான் என்பதுதான் கதை, ‘ நண்பர்கள்   கவனத்திற்கு’ என்பதற்கு பதிலாக ‘நண்பன் கவனத்திற்கு’ என பெயர் வைத்திருக்கலாம்.

சஞ்சீவ் ஒரு ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த பையன். தொடர்ந்து பெயிலாகி பெயிலாகி ஒரு பள்ளியில் படித்துக் கொண்டிருப்பவர். அந்த ஊரின் பெரிய மனிதர் மனிஷா ஜித்-ஐ எதிர்பாராமல் காதலிக்க ஆரம்பிக்கிறார். அதே சமயம், பள்ளி தலைமை ஆசிரியரின் மகனான வர்ஷன்-ம் மனிஷாவைக் காதலிக்கிறார். சஞ்சீவ், வர்ஷனை அவரது தம்பி போல நல்ல நண்பனாக நினைக்கிறார்.

ஆனால், வர்ஷனுக்கு சஞ்சீவ், மனிஷா காதல் தெரிய வந்ததும் நண்பனாக என்ன செய்கிறார் என்பதுதுன் படத்தின் கதை.

சஞ்சீவ் – 20 வயதைக் கடந்த பின்னும் பள்ளியில் படிக்கும் மாணவன் கதாபாத்திரம் . பொருத்தமாகவே இருக்கிறார். இப்படிப்பட்ட மாணவர்கள் பொதுவாக ஆர்பாட்டமாகவே இருப்பார்கள். ஆனால் இவரோ, அமைதியான நல்ல மாணவனாக இருக்கிறார். எந்த விஷயத்துலயும் தப்பா நடந்துக்காம நல்ல பேரோடவே இருக்கணும்னு நினைக்கிறாரு.

தம்பியா நினைக்கிற வர்ஷன் மேல இவர் வச்சிருக்கிற பாசமும்,  அதை வச்சிக்கிட்டு வர்ஷன் பண்ற வில்லத்தனமும் இவர் மேல பரிதாபத்தை ஏற்படுத்துது.

மனிஷா ஜித் – ஒரு பத்து வயசு பொன்னுக்கு பாவாடை – தாவணி, புடவை கட்டி விட்டு ஹீரோயினா நடிக்க வச்ச மாதிரி இருக்கு. ‘கம்பீரம்’ படத்துல பார்த்த அந்த சிறுமி மாதிரியேதான் இன்னும் இருக்காங்க மனீஷா. என்னதான் நடிச்சாலும் முகத்துல அந்த குழந்தை முகம் இன்னும் மாறவே இல்லை. சில காட்சிகள்ல இவங்க கிளாமரை வேற காட்றாரு இயக்குனர், ரசிக்கிறதுக்கு பதிலா கோவம்தான் வருது.

‘பசுத் தோல் போர்த்திய புலி’யா வர்ஷன். இப்படி நிஜ வாழ்க்கையில கூட பல பேர் சுத்திட்டு இருக்காங்க. நண்பன்னு சொல்லிக்கிட்டு குழி தோண்டறவங்க இப்பவும் இருக்காங்களே.

வர வர எந்த கதாபாத்திரமா இருந்தாலும் அதுக்கு கரெக்டா ‘ஃபிட்’ ஆகிடறாரு ராஜ்கபூர். அப்புறம் தலைவாசல் விஜய், மகாதேவன் , சங்கர் இவங்க கேரக்டர்ஸ்ம் ஓகே தான்.

பிரம்மா இசையில் ‘கும்மர கும்மாலே’, ‘அழகான பொன்னுங்கள’ பாடல்கள் ரசிக்க வச்சிருக்கு. முயன்றால் முன்னணி இசையமைப்பாளர்கள்ல ஒருத்தரா வரலாம்.

‘நண்பர்கள் கவனத்திற்கு’ – இன்னும் கொஞ்சம் கவனமாக பண்ணி இருக்கலாம்.

Read Previous

ஜீவா பிறந்தநாள் கொண்டாட்டம்

Read Next

குறும்புக்கார பசங்க – விமர்சனம்

Most Popular