விஜய் சேதுபதி, காயத்ரி நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தைத் தயாரித்த நிறுவனம் ‘லியோ விஷன்’ .
இந் நிறுவனம் மீண்டும் விஜய் சேதுபதி நடிக்கும் ‘இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறது. இப்படத்தை ஜீவா, ஸ்ரேயா நடித்த ‘ரௌத்திரம்’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கி வருகிறார்.
இப்படத்தை அடுத்து இந்நிறுவனம் மேலும் ஒரு புதிய படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ‘நாலு போலீசும் நல்லாயிருந்த ஊரும்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தை என்.ஜே. ஸ்ரீகிருஷ்ணா இயக்குகிறார். யதார்த்தமான நகைச்சுவையுடன், சமூக அக்கறையை கருவாகக் கொண்ட படமாக இப்படம் உருவாக இருக்கிறது.
லியோ விஷன் சார்பில் வி.எஸ். ராஜ்குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.