கேரளா நமக்கு தண்ணி தருதோ இல்லையோ, சினிமாவுல நடிக்கறதுக்கு அழகழகான ‘தங்கச் சிலை’களை கொடுத்திட்டிருக்கு.
அந்தக் கால பத்மினி, அப்புறம்…அம்பிகா, ராதா, அசின், நயன்தாரா, அமலா பால்….இப்படி கேரளத்து நாயகிகள் நம்ம இளைஞர்களோட ‘அமைதி’யை கெடுத்தது போக, இப்ப புதுசா ‘அமைதிப் படை -2’ படத்து மூலமா மேலும் கெடுக்க வர்றாங்க மிருதுளா முரளி…
கேரளாவுல இருந்து தமிழ்நாட்டுக்கு படிக்க வந்துட்டு , படிப்பையும் விடாம நடிச்சிட்டு வர்றாங்களாம்.
சரி அவங்க என்ன சொல்றாங்கன்னு கேப்போம்,
“ சென்னை, எம்ஓவி வைஷ்ணவா காலேஜ்ல பிஎஸ்ஸி., பிராட்காஸ்டிங் கம்யூனிகேஷன் படிச்சிட்டு வர்றேன். காமராவுக்கு முன்னாடி நடிக்க வந்தாச்சி. காமராவுக்கு பின்னாடி என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கத்தான் படிக்கிறேன். அதுக்காக, படம்லாம் இயக்க ஆசைன்னு இப்பவே ஏதாவது கிளப்பி விட்டுடாதீங்க…
மலையாளத்துல ஷாஜி கைலாஷ் இயக்கத்துல மோகன்லால் நடிச்ச ‘ரெட் சில்லீஸ்’ படத்துலதான் நடிகையா அறிமுகமானேன். அப்புறம் ‘எல்சம்மா என்ன ஆண்குட்டி’ , இப்ப ‘10.30 லோக்கல் கால்’ படத்துல நடிச்சிட்டு வர்றேன்.
‘அமைதிப்படை – 2 ’ படத்துல ரகு மணிவண்ணன் ஜோடியா நடிக்கிறேன். படத்துல நான், கோமல், வர்ஷா, ஹெப்சிபா நாலு ஹீரோயின்ஸ். இருந்தாலும் எங்களுக்குள்ள எந்த சண்டையும் வந்ததில்லை. நீளமான வசனங்களைப் பேசி நடிக்க மணிவண்ணன் சார், சத்யராஜ் சார் ரொம்ப உதவியா இருந்தாங்க.
இந்த படத்துல நடிக்கும் போது ‘அமைதிப்படை’ முதல் பாகம் எவ்வளவு பெரிய ஹிட்டான படம்னு தெரியாம நடிச்சிட்டு வந்தேன். படம் முடிஞ்சதுக்கப்புறம்தான் முதல் பாகத்தைப் பார்த்தேன், அதுக்கப்புறம்தான் ஒரு சூப்பர் ஹிட் படத்தோட இரண்டாவது பாகத்துல நடிக்கிறேன்னு பெருமையா இருந்துச்சி.
நாளைக்கு படம் ரிலீஸ்..ரொம்ப பதட்டமா இருக்கு, ” என கொஞ்சம் டென்ஷனாகவே பேசுகிறார் மிருதுளா…
அதுவும் அழகாதான் இருக்குன்னு ஆயிரம் முறை நாங்களும் சொல்லதான செய்வோம்…