ஒரு படம் இயக்க ஆசைப்பட்டேன் – அம்பிகா

nizhal ambika80களின் முன்னணி நடிகைகளில் ஒருவர் அம்பிகா. சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன், உள்ளிட்ட எண்ணற்ற நட்சத்திரங்களுடனும், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளிலும் நடித்தவர்.

தற்போது ‘நிழல்’ என தமிழிலும், ‘அனபெல்லா’ என மலையாளத்திலும்  ஒரு படத்தை அவருடைய தம்பி சுரேஷ் நாயருடன் சேர்ந்து இயக்கியுள்ளார். இப்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் அம்பிகா மேலும் கூறியதாவது,

“எவ்வளவோ படங்கள்ல ஹீரோயினா நடிச்சிருக்கேன். ஒரு படத்தையாவது டைரக்ட் பண்ணணும்னு ஆசைப்பட்டேன். என்னோட ஆசை நிறைவேறிடுச்சி. இதுக்கப்புறம் டைரக்ஷன்லாம் பண்ண மாட்டேன். ஏன்னா, நடிக்கிறதுதான் ஈஸி. டைரக்ட் பண்றது ரொம்ப கஷ்டம்.

நான் நடிச்ச போது எனக்கு கத்துக் கொடுத்த எல்லா இயக்குனர்களுக்கும், ஒளிப்பதிவாளர்களுக்கும் இந்த நேரத்துல நன்றியை தெரிவிச்சிக்கிறேன். அந்த அனுபவம்தான் இப்ப இந்த படத்தை என்னை இயக்க வச்சிருக்கு.

‘பாயின்ட் ஆஃப் வியூ’ முறையில் இந்த படத்தை எடுத்திருக்கோம். இது படத்துல புதுமையா அமைஞ்சி ரசிக்க வைக்கும்,” என்றார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

Read Previous

‘நாலு போலீசும் நல்லாயிருந்த ஊரும்’

Read Next

காஷ்மீரில் படமாக்கப்பட்ட ‘நினைத்தது யாரோ’