ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்குத் திரையுலக சூப்பர் ஸ்டாராகவும் இருந்த என்டிஆரின் பேரன் கல்யாண் ராம், ஹீரோவாக நடித்துள்ள தெலுங்குத் திரைப்படம் ‘ஓம் -3D ’.
இத்திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் ரஜினிகாந்திற்கு சென்னையில், பிரத்யேகமாக போட்டுக் காட்டப்பட்டது.
படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், “சமீப காலங்களில் நான் பார்த்து ரசித்த சிறப்பான கமர்ஷியல் திரைப்படம் ‘ஓம்’. 25 கோடி ரூபாய்க்குள் ஒரு அருமையான ‘3டி’ படத்தை ஹாலிவுட் தரத்திற்கு உருவாக்கியிருக்கிறார்கள்.
கல்யாண் ராமின் நடிப்பும், சண்டைக் காட்சிகளும் அருமையாக அமைந்துள்ளன. ஒரு நல்ல படத்தை உருவாக்கியதற்காக படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்,” என்று ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவுமான கல்யாண் ராம், “நான் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளேன். ரஜினிகாந்த் அவர்கள் எங்களது முயற்சியையும், உழைப்பையும் பாராட்டியது எங்களுக்கு மேலும் ஊக்கத்தையும், நம்பிக்கையையும் தருவதாக உள்ளது, ” என்றார்.
அப்புறம் என்னங்க…ரஜினிகாந்த்தே பாராட்டிட்டாரு , சீக்கிரமா படத்தை தமிழ்ல ‘டப்’ பண்ணி ரிலீஸ் பண்ணிடுங்க…
சுனில் ரெட்டி இயக்கியுள்ள இப்படத்தில் கல்யாண் ராம், கீர்த்தி கர்பந்தா, நிகிஷா பட்டேல் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
ஆந்திராவில் , இப்படம் நாளை மறுநாள் 19ம் தேதி வெளியாகிறது.