ஒன்று கூடிய ‘80களின் நட்சத்திரங்கள்…

1980-reunion1980களில் தென்னிந்திய அளவில் புகழ் பெற்ற நட்சத்திரங்களாக விளங்கியவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒன்று கூடி மகிழ்ந்து வருகின்றனர்.

கடந்த சில வருடங்களாகவே இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு இந்த நிகழ்ச்சியை நடிகை சுஹாசினி முன்னின்று நடத்தியுள்ளார்.

சில தினங்களுக்கு முன் நடைபெற்ற இந்த ஆண்டிற்கான ‘ரீ-யூனியன்’ நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, வெங்கடேஷ், மோகன்லால், அம்பரீஷ், அர்ஜுன், மோகன், ரமேஷ் அரவிந்த், ராதிகா, ராதா, சுஹாசினி, சரிதா, சுமலதா, பூர்ணிமா பாக்யராஜ், அம்பிகா, ரேவதி, லிஸி, குஷ்பு,  ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Read Previous

இன்று ‘இது கதிர்வேலன் காதல்’ இசை வெளியீடு…

Read Next

மலையாள நடிகருடன் நஸ்ரியாவுக்கு திருமணம்…

Most Popular