மலையாள நடிகருடன் நஸ்ரியாவுக்கு திருமணம்…

fahad-fazil-and-nazriya‘நேரம்’ படத்தில் அறிமுகமாகி ஒரே படத்தில் பல இளைஞர்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகை நஸ்ரியா.

தொடர்ந்து ‘நய்யாண்டி, ராஜா ராணி’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது ‘திருமணம் என்னும் நிக்காஹ், வாய் மூடிப் பேசவும்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இவருக்கும் மலையாள நடிகரும், பிரபல இயக்குனர் ஃபாசில் மகனுமான ஃபஹத் பாசிலுக்கும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற உள்ளது. நிச்சயதார்த்தம் அடுத்த மாதம் நடக்க இருக்கிறது.

இவர்களிருவரும் இப்போதுதான் மலையாளத்தில் ‘எல் ஃபார் லவ்’ என்ற படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

ஃபஹத் பாசில் மலையாளத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் இளம் நடிகர். இவர் நடித்து வெளிவந்த படங்களில் பல படங்கள் சூப்பர் ஹிட்டாக ஓடியுள்ளன.

இருவரது பெற்றோரும் சேர்ந்து முடிவு செய்த திருமணம் இது என அவர்களுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறுகிய காலத்தில் புகழ் பெற்ற நஸ்ரியா, திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து நடிப்பாரா என்பது தெரியவில்லை.

இந்த திருமணம்  பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குனரும் ஃபஹத் பாசில் தந்தையுமான ஃபாசில் வெளியிட்டுள்ளார்.

Read Previous

ஒன்று கூடிய ‘80களின் நட்சத்திரங்கள்…

Read Next

விஜய், மோகன்லால் கொண்டாடிய “சக்சஸ் பார்ட்டி”