விஜய், மோகன்லால் கொண்டாடிய “சக்சஸ் பார்ட்டி”

jilla-success-party‘ஜில்லா’ படத்தின் சக்சஸ் மீட் கடந்த வாரம் நடைபெற்ற போது, “எனக்கு இந்த ‘சக்சஸ் மீட்டிங்’லலாம் கலந்துக்கிறதுக்கு விருப்பமேயில்லை, ரசிகர்களுக்கு நன்றி சொல்றதுக்காகத்தான் இதை நான் பயன்படுத்திக்கிறேன்,” என பத்திரிகையாளர்கள் முன் விஜய் சொன்னார்.

ஆனால், அப்படி சொன்ன சில நாட்களுக்குள் சென்னையில், விஜய் ஒரு ‘சக்சஸ் பார்ட்டி’ கொடுத்திருக்கிறார். அதில், மோகன்லால், வைரமுத்து, இசையமைப்பாளர் இமான், இயக்குனர் ஆர்.டி.நேசன், சண்டைப் பயிற்சியாளர் சில்வா, நடிகர்கள் மகத், ஜோமல்லூரி உட்பட ‘ஜில்லா’ குழுவினர் அனைவரும் ஒன்று சேர்ந்து ‘ஜில்லா’ வெற்றியைக் கொண்டாடியுள்ளனர்.

நிகழ்ச்சி மிகவும் கலகலப்பாக நடைபெற்றதாக தகவல்கள் தெரிவக்கின்றன.

 

Read Previous

மலையாள நடிகருடன் நஸ்ரியாவுக்கு திருமணம்…

Read Next

காக்கிச் சட்டையில் நயன்தாரா…