‘கோலி சோடா’ – மேலும் திரையரங்குகள்…

koli soda_00001விஜய் மில்டன் இயக்கத்தில் கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ், சாந்தினி, சீதா மற்றும் பலர் நடித்துள்ள ‘கோலி சோடா’ படம் இரு தினங்களுக்கு முன் 24ம் தேதி வெளிவந்தது.

விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் பாராட்டப்பட்டு வரும் இத்திரைப்படம் இன்று முதல் மேலும் 40 திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.

மிகப் பெரிய ஹீரோக்கள் நடித்த படங்களுக்கு மட்டுமே அதிக திரையரங்குகள் கிடைத்து வரும் நிலையில், மிகவும் குறைந்த பட்ஜெட்டில் சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பு தமிழ் சினிமாவை கொஞ்சம் தலை நிமிர வைத்துள்ளது.

மிகவும் குறைந்த செலவில் தயாரான படம் என்பதால் இன்னும் ஒரு சில நாட்களிலேயே இந்த படம் லாபகரமான படமாக அமைந்து விடும் என வினியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் தெரிவித்துள்ளனர்.

Read Previous

எனக்குக் கிடைத்த பெரும் பேறு – கமல்ஹாசன்

Read Next

மூன்று மாதம்தான்… – ஒரு நாயகியின் சபதம்…

Most Popular