நஸ்ரியா பற்றி பரவிய மோசமான வதந்தி…

nazriya-nazim-2814நடிகை நஸ்ரியாவைப் பற்றியும், அவர் திருமணம் செய்து கொள்ள இருக்கும் நடிகர் ஃபஹத் பாசில் பற்றியும் கேரளாவில் நேற்று மோசமான வதந்தி ஒன்று பரவியது.

‘வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர்’ போன்ற சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய இந்த வதந்தியைப் பார்த்து அனைவருமே அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கேரளாவில் முன்னணியில் உள்ள ஒரு தனியார் செய்தித் தொலைக்காட்சியின் ‘லோகோ’வுடன் இடம் பெற்ற அந்த செய்தியை உண்மை என்று நம்பும் அளவிற்கு யாரோ வடிவமைப்பு செய்திருக்கிறார்கள்.

பொதுவாக காதல் பற்றிதான் யாராவது வதந்தியைக் கிளப்புவார்கள்.

ஆனால், நஸ்ரியா – ஃபஹத் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ள நிலையில், இந்த திருமணத்தைப் பிடிக்காத யாரோ ஒருவரோ, அல்லது நஸ்ரியாவின் வெறித்தனமான ரசிகர் யாரோதான் அந்த வதந்தியைப் பரப்பியிருக்கலாம் என சொல்கிறார்கள்.

தனியார் தொலைக்காட்சி நிறுவனமும் அந்த செய்தியில் தங்களது பெயரை வேண்டுமென்றே தவறாக பயன்படுத்தியிருக்கிறார்கள், எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை எனத் தெரிவிக்கிறது.

எப்படி எப்படியெல்லாம் பீதியை கிளப்புறாங்கப்பா…

Read Previous

கமலுக்கு ‘அங்க’ இருந்து வந்த வாழ்த்து…

Read Next

நடிகையாக இருக்கக் காரணம் தெலுங்கு சினிமாதான் – காஜல் அகர்வால்

Most Popular