கமலுக்கு ‘அங்க’ இருந்து வந்த வாழ்த்து…

kamal-and-mohanlalபத்ம பூஷன் விருதைப் பெற்ற தமிழ் நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நடிகர்களான ரஜினிகாந்த் உட்பட யாருமே இதுவரை வாழ்த்து சொல்லவில்லை என நேற்றைய செய்தி ஒன்றில் குறிப்பிட்டிருந்தோம்.

ஒரு கலைஞனின் திறமையை உண்மையாகவே மதிக்கத் தெரிந்த மலையாளக் கரையோரத்திலிருந்து கமலுக்கு மற்றொரு திறமைசாலியிடமிருந்து வாழ்த்து வந்துள்ளது.

அவர் வேறு யாருமல்ல, மலையாளத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவரான மோகன்லால்.

கமலுக்கு பத்ம பூஷன் விருது கிடைத்துள்ளதற்கான அவரது வாழ்த்துச் செய்தியில்,

“பத்ம பூஷன் விருது பெறுவதற்கு கமல்ஹாசன் முழுவதும் தகுதியானவர். நம்முடைய திறமைக்கும், உழைப்புக்கும் நாட்டிடமிருந்து கிடைக்கும் இத்தகைய அங்கீகாரம் மிகப் பெரிய மகிழ்ச்சியைத் தரும்,” என தெரிவித்துள்ளார்.

நம் தமிழ் நடிகர்களை விட முதன்மையாகவும் , முத்தாய்ப்பாகவும் வாழ்த்திய அவருடைய பெருந்தன்மை பாராட்டுக்குரியது.

Read Previous

தனுஷ் வில்லனாக கார்த்திக்…

Read Next

நஸ்ரியா பற்றி பரவிய மோசமான வதந்தி…

Most Popular