ஆர்டின் ஃப்ரேம்ஸ் நிறுவனத்தின் சார்பாக டி.ஆர்.எஸ் அன்பு மற்றும் சுரேஷ் நாராயண் தயாரிக்கும் படம் ‘மூன்றாம் உலகப் போர்’. அறிமுக இயக்குனர் சுகன் கார்த்தி இப்படத்தை இயக்குகிறார்.
‘பாலை’ படத்தில் நடித்த சுனில் குமார் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நடித்த அகிலா கிஷோர் கதாநாயகியாக நடிக்கின்றார். மற்றும் பல நடிகர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
2025 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் நடக்கிறது. அந்த போரின் காரணம் என்ன? எந்த முடிவை நோக்கி அந்த போர் நடக்கிறது? என்பதே ‘மூன்றாம் உலகப் போர்’ படத்தின் கதை.
ஒளிப்பதிவை தேவாவும், படத்தொகுப்பை எஸ். ரிச்சர்டும் மேற்கொள்கின்றனர். வேத் ஷங்கர் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல பாடகர் ஷங்கர் மகாதேவன் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.
இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கிவிட்ட ‘மூன்றாம் உலகப் போர்’ படத்தின் இசை வெளியிடு விரைவில் நடைபெறவுள்ளது.