ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் ‘ஐ’ படத்தின் இசை வெளியீடு வரும் 15ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
இந்த இசை வெளியீட்டிற்கு ஹாலிவுட்டின் பிரபல நடிகரான ஆர்னால்ட் ஷவாஸ்நேகர் வருகை தர உள்ளார். தமிழ்த் திரையுலகின் பிரபல நட்சத்திரங்களும் கலந்து கொள்ளும் இந்த இசை வெளியீட்டு விழாவில் ஆர்னால்ட் கலந்து கொள்ள இருப்பது தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகினர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த விழாவில் ஆர்னால்ட் வந்து கலந்து கொள்ள இருப்பதைப் பற்றி அவரே வெளியிடும் அறிவிப்பு ஒன்றை சோனி மியூசிக் இந்தியா இசை நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில், “ஹலோ இந்தியா, மிகச் சிறந்த இயக்குனரான ஷங்கர் ‘ஐ’ படத்தை இயக்கியிருப்பதற்கு அவருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். நிறைய விஷவல் எஃபெக்ட்டுகளுடன் அற்புதமான படத்தை உருவாக்கியிருக்கிறார். ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக நான் இந்தியாவிற்கு வருகிறேன்.
‘ஐ’ படத்தின் இசை வெளியீடு ஒரு கண்கவர் விருந்தாக அமைய உள்ளது. உங்களை சந்திப்பதற்காக நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். சென்னை…செப்டம்பர் 15 …ஒரு பிரமாதமான விழாவுக்காக…நான் அங்கு இருப்பேன்,” என அந்த வீடியோ அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
‘ஐ’ படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்தியத் திரைப்பட இசை விழாக்களிலேயே இந்த படத்தின் விழாவைப் பற்றி உலகம் முழுவதும் பேசப் போவது உறுதி…
ஆர்னால்ட் பேச்சு வீடியோ…