‘எலி’யாக வருகிறார் வடிவேலு…

eli vadivelu new movie‘வந்துட்டான்யா…வந்துட்டான்யா…’ என்ற வரவேற்கும் வார்த்தையையே வித்தியாசமாக ஒலிக்க வைத்தவர் வடிவேலு. இன்றைக்கும் காமெடி சேனல்கள் மூலம் மார்க்கெட்டில் இருந்து கொண்டிருக்கிறார்.

இடைவெளிவிட்டு ‘தெனாலிராமன்’ மூலம் திரையுலக மார்கெட்டையும் கைப்பற்றி விடலாம் என நினைத்தார். எங்களுக்கு இந்த வடிவேலு வேணாம், ‘அந்த’ வடிவேலுதான் வேண்டுமென ‘கைப்புள்ள’யை கைவிட்டார்கள் ரசிகர்கள்.

இருந்தாலும் மீண்டும் ‘தெனாலிராமன்’ படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன், இந்த ‘எலி’யில் அவர் யுவராஜ், மூலம் களம் இறங்குகிறார்.

படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்டது, இன்று படத்தின் முதல் பார்வையை வெளியிட்டார்கள். விரைவில் எலியாக, வந்து ‘புலி’ப் பாய்ச்சல் பாய்வாரா என்று பார்ப்போம்…

Read Previous

‘என்னை அறிந்தால்’ எப்படி இருக்கிறது…?

Read Next

என்னை அறிந்தால் – விமர்சனம்

Most Popular