‘என்னை அறிந்தால்’ எப்படி இருக்கிறது, என்பதைப் பற்றிய பேச்சுக்கள்தான் காலையிலிருந்து ஒலி, ஒளித்துக் கொண்டும், சமூக வலைத்தளங்களில் எழுதப்பட்டுக் கொண்டும் இருக்கிறது.
சமீப காலத்தில் இப்படி ஒரு பேச்சும், பரபரப்பும் வேறு எந்தப் படத்திற்காகவாவது இருந்ததான என்பது சந்தேகமே…சாதாரண ஒரு நாளில் வெளிவந்ததற்கே இப்படி என்றால், இன்னும் தீபாவளி, பொங்கல் மாதிரியான நாட்களில் இப்படம் வெளிவந்திருந்தால் அஜித் ரசிகர்கள் அந்த நாட்களையே மறந்து விடுவார்கள் போலிருக்கிறது.
நேற்று, இரவிலிருந்தே படத்தைப் பற்றிய பேச்சுக்கள் ஆரம்பமானாலும், தமிழ்நாட்டில் அதிகாலை 4 மணிக்கே சில திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டு பரபரபரன படத்தைப் பற்றிய ‘கமெண்ட்’டுகள் பகிரப்பட்டு வருகின்றன.
கௌதம் மேனன் படங்களுக்கே உரிய மெதுவான ஆரம்பம், கொஞ்சம் கொஞ்சமாக கதைக்குள் நகர்ந்து அப்படியே பரபரவென தீப்பிடித்து கிளைமாக்சை நெருங்கும் போது பற்றிக் கொள்கிறது என்பதுதான் பொதுவான கமெண்ட்டாக இருந்து வருகிறது.
இதுவரை பார்த்த அஜித் வேறு, இந்தப் படத்தில் பார்க்கும் அஜித் வேறு, அருண் விஜய்யா இப்படி நடித்திருக்கிறார், அனுஷ்கா அவ்வளவு அழகு, த்ரிஷா சேன்சே இல்லை, இப்படித்தான் பேசிக் கொள்கிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் பல நண்பர்களிடமும், படம் பார்த்தவர்களிடமும் விசாரித்த விதத்தில் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் எதிர்பார்த்ததற்கும் மேலான வெற்றியையும், வசூலையும் தரும் என்றே சொல்லப்படுகிறது.
‘என்னை அறிந்தால்’ சம்பந்தப்பட்ட அனைவருக்குமே ஏற்றம்தான்…