இரு படங்களில் நாயகனாக நடிக்கும் விஜய்யின் அப்பா…

sa chandrasekaran touring talkiesநடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் பல வெற்றிப் படங்களை இயக்கியவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘டூரிங் டாக்கீஸ்’ படத்தை இயக்கி முதல் கதையில் நாயகனாகவும் நடித்திருந்தார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன்.

அந்தப் படத்தில் அவருடைய நடிப்பிற்கு வரவேற்பு கிடைத்ததையடுத்து தற்போது இரண்டு படங்களில் நாயகனாக நடிக்க உள்ளார்.

பல வெற்றிப் படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ், எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் கூறிய ஒரு கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போனதால் நாயகனாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது.

மற்றொரு படத்தை விக்னேஷ் – கிருஷ்ணா என்ற இரு இயக்குனர்கள் இயக்க உள்ளனர். இப்படத்திற்கு ‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படம்ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றி பெற்ற ‘பாக்பன்’ படத்தின் கதையைத் தழுவியது என்று சொல்லப்படுகிறது.

‘டூரிங் டாக்கீஸ்’ படத்துக்குப் பிறகு படங்களை இயக்க மாட்டேன் என்று சொன்ன இயக்குனர் எஸ்.ஏ.சி., இனி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடர்கிறார்.

Read Previous

அஜித் ரசிகர்களின் ‘மாஸ்’…

Read Next

‘என்னை அறிந்தால்’ எப்படி இருக்கிறது…?