அஜித் ரசிகர்களின் ‘மாஸ்’…

ajith fans massஆன்-லைன் எனப்படும் இணையதளங்களைப் பயன்படுத்துவதில் அஜித் ரசிகர்களின் கொண்டாட்டமே தனிதான். ஒரு விஷயத்தைச் சொன்னால் பல ரசிகர்கள் அதை செய்து விடுகிறார்கள்.

ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்களின் செயல்பாடு அதிகமாக இருக்கும். ரஜினிகாந்துக்குப் பிறகு அஜித்திற்கு ‘ஃபேன் பாலோயர்ஸ்’ அதிகம் என்றும் சொல்வார்கள்.

நாளை ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் வெளிவருதையடுத்து ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் ‘என்னை அறிந்தால்’ படத்தின் அஜித் புகைப்படம் ஒன்றை ஒரே மாதிரியாக பலரும் புரொஃபைல் பிக்சராக (Profile Picture) ஆக மாற்றியுள்ளனர்.

கொண்டாட்டங்களில் எவ்வளவோ வகை உண்டு, அதில் ஒரு வித்தியாசமான ஒன்றாக இது அமைந்துள்ளது. புகைப்படத்தைப் பார்த்தாலே உங்களுக்குப் புரியும்…

Read Previous

‘தாரை தப்பட்டை’ ஷுட்டிங்கில் இளையராஜா…

Read Next

இரு படங்களில் நாயகனாக நடிக்கும் விஜய்யின் அப்பா…