புதுமுகங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து, புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்கியுள்ள இந்தப் படம் சமீப காலத்தில் வெளிவந்த சிறிய படங்களில் நல்ல தரத்தை வெளிப்படுத்திய சிறப்பான படம். விஜய், விஷால், போன்ற பெரிய ஹீரோக்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தால் இதன் வெற்றியே வேறு. மற்ற பெரிய படங்களுக்கு மத்தியில் இந்த சிறிய சிறந்த படத்தையும் ரசிகர்கள் ஆதரிக்க வேண்டும். அம்மாபேட்டை ஒன்றியத்தில் தொடர்ந்து சேர்மனாக இருந்து வரும் நாயகம் குடும்பத்தாரை எதிர்க்கிறார் ஜெகன். நாயகத்தின் அப்பாவும், ஜெகனின் அப்பாவும் 40 வருடங்களுக்கு மேலாக நண்பர்களாக இருந்தாலும், பதவி ஆசை இருவரது மகன்களையும் எதிரிகளாகவே வைத்திருக்கிறது. எப்படியாவது நாயகத்தின் சேர்மன் பதவியை பறித்து, சேர்மனாகத் துடிக்கிறார் ஜெகன். அவருடைய ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
அரசியல் பழி வாங்கும் கதைதான் என்றாலும் காதல், குடும்பம், சென்டிமென்ட் என அனைத்தையும் வைத்திருக்கிறார் இயக்குனர் சோழதேவன். நடித்திருக்கும் யாரையுமே புதுமுகங்கள் என்று சொல்ல முடியாது. நாயகன் ஜெகன், நாயகி கயல், வில்லன் நாயகம் மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்கள் என அனைவருமே அவருடைய கதாபாத்திரங்களில் யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். ஆரம்பம் முதல் கடைசி வரை படம் பரபரவென்று நகர்கிறிது. தேவையற்ற பாடல்கள், பிரம்மாண்டமான அரங்கம், வெளிநாட்டு பாடல் காட்சி என வழக்கமான சினிமாவாக இல்லாமல் பதவிக்காகத் துடிக்கும் இருவரது வாழ்க்கையை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.
நாயகன் ஜெகன், வில்லன் நாயகம் இருவருக்குமிடையே இருக்கும் பகையை மட்டுமே, ஆரம்பம் முதல் கடைசி வரை வைத்திருப்பது கொஞ்சம் அலுப்பைத் தருகிறது. அரசியல் கூட ஒன்றியத்தை தாண்டாமல் ஒரே இடத்துக்குள்ளேயே சுற்றி வருகிறது. சண்டியர் – சரக்கு இருக்கு…