சென்சார் சான்றிதழ் பெற்ற சமந்தாவின் யசோதா

 

சமந்தா நடித்திருக்கும் அதிரடி திரைப்படம் தான் ‘யசோதா’. படத்தில் சமந்தா நடித்திருக்கிறார். இந்தப் படம் தற்போது யூ/ஏ சான்றிதழுடன் சென்சார் பெற்றுள்ளது.

வாடகைத்தாய் மற்றும் அதைச் சுற்றியுள்ள மருத்துவக் குற்றங்களை அடிப்படையாகக் கொண்ட ஆக்ஷன் மற்றும் எமோஷன் உள்ளடக்கிய கதை தான் இந்த யசோதா.. 

வாடகைத்தாயாக சமந்தா நடித்திருக்கும் இந்தப் படம் இயக்குநர்களான ஹரி மற்றும் ஹரீஷ் இயக்கத்தில், தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிப்பில்  நவம்பர் மாதம் 11ம் தேதி வெளியாக இருக்கிறது.

பிரபல நடிகர்களான உன்னி முகுந்தன், வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பலர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

’யசோதா’ திரைப்படம் சமந்தாவின் முதல் பான் இந்தியா படமாக ஐந்து மொழிகளில் உருவாகி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Read Previous

மீண்டும் இயக்கத்திற்கு திரும்புகிறார் தினந்தோறும் நாகராஜ்

Read Next

மகாமுனி இயக்குனரோடு கைகோர்த்த அர்ஜூன் தாஸ்