மகாமுனி இயக்குனரோடு கைகோர்த்த அர்ஜூன் தாஸ்

DNA மெக்கானிக் கம்பெனி வழங்கும் 'மெளனகுரு' & 'மகாமுனி' புகழ் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ்- தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் 'புரொடக்‌ஷன் நம்பர் 1' பூஜையுடன் தொடங்கியது

'மெளனகுரு', 'மகாமுனி' ஆகிய படங்களை இயக்கியவர் தான் இயக்குநர் சாந்தகுமார். 

இப்போது இயக்குநர் சாந்தகுமார் தன்னுடைய மூன்றாவது படத்தை 'டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி' பேனரின் கீழ் இயக்க இருக்கிறார். கதையின் முன்னணி கதாபாத்திரத்தில் அர்ஜூன் தாஸ் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர். சென்னையில் எளிய முறையிலான பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது.

 'மகாமுனி' மற்றும் 'மெளனகுரு' படங்களில் இருந்த த்ரில்லர், எமோஷன்ஸ், ரொமான்ஸ், ஆக்‌ஷன் மற்றும் புதிர் என அனைத்தும் இந்த இரு படங்களில் இருக்கும். அதேபோல, இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் புதிய படமும் குறிப்பிட்ட ஒரு வகைக்குள் இருக்காது.

ரேஷ்மா வெங்கடேஷ், சுஜித் ஷங்கர், GM சுந்தர், S ரம்யா மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

தொழில்நுட்பக் குழு விவரம்:

எழுத்து, இயக்கம், தயாரிப்பு: சாந்தகுமார் (DNA மெக்கானிக் கம்பெனி),
ஒளிப்பதிவு: சிவா GRN,
கலை: சிவராஜ் சாமரன்,
சண்டைப் பயிற்சி: ஆக்‌ஷன் பிரகாஷ்,
எடிட்டர்: V.J. சபு ஜோசப்,
இசை: தமன்,
பாடல் வரிகள்: யுகபாரதி,
படங்கள்: M. ஆனந்தன்,
ஆடை வடிவமைப்பு: மீனு சித்ரா கனி,
ஆடை: P. செல்வம்,
ஒப்பனை: வினோத்,
இணை இயக்குநர்கள்: சிவ பிரகாஷ் & கிருஷ்ண மூர்த்தி,
புரொடக்‌ஷன் எக்ஸிகியூட்டிவ்: C சரவணன்,
தயாரிப்பு மேலாளர்: தேனி தமிழ்,
நிர்வாக தயாரிப்பாளர்: S. பிரேம்.

Read Previous

சென்சார் சான்றிதழ் பெற்ற சமந்தாவின் யசோதா

Read Next

உண்மையாக உழைத்தால் சினிமாவிலும் அரசியலிலும் ஜெயிக்கலாம்: விஜய் வசந்த் 

Most Popular