மீண்டும் இயக்கத்திற்கு திரும்புகிறார் தினந்தோறும் நாகராஜ்

1998ம் ஆண்டு வெளிவந்த ‘தினந்தோறும்’ படத்தை இயக்கியவர் நாகராஜ். முரளி – சுவலட்சுமி நடித்த இந்த படம், வெளிவந்தபோது பத்திரிகை உலகம் கொண்டாடி தீர்த்தது.  இந்த படம் மிகப்பெரும் வெற்றி பெற்றதால், இவரது பெயரோடு படத்தின் டைட்டிலும் ஒட்டிக் கொண்டது.

பல வருடங்களுக்குப் பிறகு கெளதம் மேனன் இயக்கிய மின்னலே, காக்க காக்க படங்களுக்கு வசனம் எழுதிய நாகராஜ், தொடர்ந்து 2013 ஆண்டு ‘மத்தாப்பு’ என்ற படத்தை இயக்கியிருந்தார். 

பல வருடங்களுக்குப் பிறகு, Q சினிமாஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் சசிகுமார்.R தயாரிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் தினந்தோறும் நாகராஜ். பெயரிடப்படாத இந்த படத்திற்கு  நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. ஜனவரியில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.
 
C. சத்யா இப்படத்திற்க இசையமைக்கிறார்.

காடன், இடிமுழக்கம் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அசோக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
நடனம் – சாண்டி
ஸ்டண்ட் – தினேஷ் சுப்பராயன்.
மக்கள் தொடர்பு – மணவை புவன் 

Read Previous

இந்திக்கு எண்ட்ரீ கொடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

Read Next

சென்சார் சான்றிதழ் பெற்ற சமந்தாவின் யசோதா