கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ முதல் பார்வை வெளியீடு

ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் முதல் பார்வை சற்று முன் வெளியிடப்பட்டது.

முதல் பார்வையை வெளியிட்டு கமல்ஹாசன் டிவிட்டரில், “வீரமே வாகையைச் சூடும். மீண்டும் துணிகிறேன், நம் இளம்  திறமைகளை உம் முன் சமர்ப்பிக்க. நேற்றே போல நாளையும் நமதாக வாழ்த்தட்டும் தாயகம். விக்ரம்… விக்ரம்…” என்றும்,

படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், 

யுத்தத்தால் அதோ அதோ விடியுது,
சத்தத்தால் அராஜகம் அழியுது,
ரத்தத்தால் அதோ தலை உருளுது,
சொர்க்கங்கள் இதோ இதோ தெரியுது,
துடிக்குது புஜம்,
ஜெயிப்பது நிஜயம்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இதனிடையே, இந்த ‘விக்ரம்’ பட போஸ்டர் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த ‘விருமாண்டி’ பட போஸ்டரைப் போல இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Read Previous

ஒரே நேரத்தில் பல பட அறிவிப்புகளை வெளியிட்ட தயாரிப்பாளர்

Read Next

கலர்ஸ் தமிழ் – நாளை ‘நையப்புடை, வெல்வெட் நகரம்’ படங்கள் ஒளிபரப்பு