விஜய் டிவியில் ‘செந்தூரப்பூவே’, புத்தம் புதிய தொடர்

கொரானோ தொற்று மற்றும் ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிவி படப்பிடிப்புகள் மீண்டும் ஆரம்பமாக உள்ளன. 

அதனால், விஜய் டிவி மீண்டும் ஒரிஜனல் தொடர்கள், நிகழ்ச்சிகளை அடுத்த வாரம் முதல் ஒளிபரப்ப உள்ளன.

அவற்றோடு, ஜூன் 8 முதல் இரவு 9 மணிக்கு ‘செந்தூராப்பூவே’ என்ற புதிய மெகா தொடரை ஆரம்பிக்க உள்ளது.  

இது காதல் நிறைந்த ஒரு குடும்பத் தொடர்.  பாண்டவர் பூமி, பீஷ்மர், நேசம் புதுசு உள்ளிட்ட படங்களில் நடித்த ரஞ்சித் இத்தொடரின் நாயகனாக நடிக்கிறார். டிவி தொடர் ஒன்றில் ரஞ்சித் நடிப்பது இதுவே முதல் முறை.

மனைவியை இழந்தவர் துரைசிங்கம்.  இவர் மரியாதைமிக்க குடும்பத்தின் மூத்த மகன்.  அவருக்கு கயல் மற்றும் கனி என்ற இரண்டு அழகான  மகள்கள் உள்ளனர். அவரது மனைவி அருணா இறந்த பிறகு துரைசிங்கம் மறு திருமணம் பற்றி யோசிக்கவில்லை. சூழ்நிலைகள் காரணமாக அவரை மறுமணம் செய்து கொள்ள அவரது தாய் வலியுறுத்துகிறார்.  அதன் காரணமாக துரைசிங்கம், ரோஜாவை திருமணம் செய்ய நேர்கிறது.  

துரைசிங்கத்தின் மகள்கள் படிக்கும் பள்ளியின் ஆசிரியை ரோஜா.  இருவரும் நல்ல ஜோடியாக இருந்தாலும் அவர்களுக்குள் பெரும் வயது வித்தியாசம் உள்ளது.  அதையும் மீறி அவர்கள் இருவரும் எவ்வாறு வாழ்வில் இணைகிறார்கள் என்பதை சுவாரசியத்துடன் சொல்கிறது ‘செந்தூரப்பூவே’ நெடுந்தொடர்.

Read Previous

விஜய் டிவி – ஒரிஜனல் தொடர்கள், நிகழ்ச்சிகள் மீண்டும் ஆரம்பம்

Read Next

எம்.ஜி.ஆர், சரோஜா தேவி இணைந்த படங்கள்

Most Popular