விஜய் சேதுபதிக்கு நாயகியாக நித்யா மேனன்

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக நித்யா மேனன் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

பல்வேறு நாயகர்களிடம் தன்னுடைய அடுத்த படத்துக்காக பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் பாண்டிராஜ். இறுதியாக விஜய் சேதுபதி நடிக்க புதிய படமொன்று ஒப்பந்தமானது. இது பாண்டிராஜ் பாணியிலான கதை என்றாலும், களம் புதிதாக இருக்கும் என்கிறார்கள்.

சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நாயகியாக நித்யா மேனன் நடிக்கவுள்ளார். இதனை ’திருச்சிற்றம்பலம்’ படத்துக்காக தேசிய விருது வென்றதற்கு அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

விஜய் சேதுபதி – நித்யா மேனன் இருவரும் மலையாள படமொன்றில் நடித்துள்ளனர். அதில் ஒரு காட்சியில் மட்டுமே இருவரும் இணைந்து நடித்திருப்பார்கள். முழுநீளப் படத்தில் விஜய் சேதுபதி – நித்யா மேனன் இருவரும் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறையாகும்.

Read Previous

மீண்டும் சர்ச்சைக்குள்ளான ‘இந்தியன் 2’

Read Next

’புஷ்பா 2’ வெளியீட்டில் மாற்றமில்லை: அல்லு அர்ஜுன்