விரைவில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம்?

இன்னும் சில மாதங்களில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இருவரும் திருமணம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. எதற்கும் பயப்படாமல் துணிச்சலான இவருடைய பேச்சுகள், இளைஞர்கள் மத்தியில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறது. 

இவரும் ராஷ்மிகா மந்தனாவும் நீண்ட வருடங்களாக காதலித்து வருகிறார்கள்.விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து நடித்த முதல் படம் ‘கீதகோவிந்தம்’. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் படப்பிடிப்பில் தான் இருவருக்கும் காதல் மலர்ந்தது.

தற்போது இந்திய திரையுலகின் முன்னணி நாயகியாக வலம் வருகிறார் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் இவர் ரன்பீர் கபூருடன் நடித்த ‘அனிமல்’ திரைப்படம் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கடந்த சில தினங்களாக விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவருக்கும் பிப்ரவரி மாதத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

முதலில் தெலுங்கில் வெளியான இந்தச் செய்தி, தற்போது தீயாய் பரவி இந்தித் திரையுலகின் முன்னணி செய்தி நிறுவனங்களிலும் வெளியாகியுள்ளது.

இது உண்மையா, வதந்தியா என்பது இருவரும் அதிகாரபூர்வமாக அறிவித்தால் மட்டுமே தெரியவரும்.

Read Previous

2025-ம் ஆண்டு இறுதியில் ‘சலார் 2’: தயாரிப்பாளர் உறுதி

Read Next

கேத்ரினா கைஃப் பார்த்ததும் ஆச்சர்யப்பட்டு போனேன் – விஜய் சேதுபதி

Most Popular