2025-ம் ஆண்டு இறுதியில் ‘சலார் 2’: தயாரிப்பாளர் உறுதி

2025-ம் ஆண்டு இறுதியில் ‘சலார் 2’ வெளியாகும் என்று தயாரிப்பாளர் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ப்ரித்விராஜ், ஸ்ரேயா ரெட்டி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சலார் 1’. ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படம் டிசம்பர் 22-ம் தேதி வெளியானது.

பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. கடும் விமர்சனத்துக்கு உள்ளானாலும், சுமார் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது.

இதன் பொருட்செலவுக்கு, வசூல் குறைவு தான் என்ற பேச்சு விநியோகஸ்தர்கள் மத்தியில் நிலவுகிறது.

முதல் பாகத்தின் விமர்சனத்தால் 2-ம் பாகம் தொடங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த கேள்விக்கு இயக்குநர் பிரசாந்த் நீலும் மழுப்பலாக பதில் அளித்திருந்தார்.

இந்நிலையில், ‘சலார் 2’ குறித்து தயாரிப்பாளர் விஜய் கிராக்ந்தூர் அளித்துள்ள பேட்டியில் “2025-ம் ஆண்டு இறுதியில் ‘சலார் 2’ வெளியாகும். ’சலார் 1’ படம் ஒரு துளி மட்டுமே, ‘சலார் 2’ படத்தின் நிறைய அரசியல், சண்டைக் காட்சிகள் மட்டும் டிராமா இருக்கும். 

பிரபாஸ் மற்றும் பிரசாந்த் நீல் இருவருமே ‘சலார் 2’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க ஆர்வமாக இருக்கிறார்.

’சலார் 2’ கதை தயாராக இருக்கிறது. முதல் பாகத்துக்கு சில எதிர்மறை விமர்சனங்கள் இருந்தது உண்மைத் தான். ஆனால் யாரும் படத்தின் உருவாக்கம் மற்றும் பட்ஜெட் ஆகியவற்றில் குறைச் சொல்லவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Read Previous

’சூப்பர் டீலக்ஸ்’ ஆஸ்கர் தேர்வு இல்லை, விஜய் சேதுபதி வருத்தம்

Read Next

விரைவில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம்?

Most Popular