‘கே.ஜி.எஃப்’ இயக்குநரின் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ஃபிலிம் நகரில் உள்ள விஜய் தேவரகொண்டாவின் வீட்டிற்கு சென்றுள்ளார் ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் பிரசாந்த் நீல். இதை வைத்து பலரும் பிரசாந்த் நீல் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ளார் என்று செய்திகள் பரப்பி வருகிறார்கள். இது தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஆனால், ‘சலார் 2’ மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் படம் ஆகியவற்றில் மும்முரமாக இருக்கிறார் பிரசாந்த் நீல். இருவரும் இணைய வாய்ப்பில்லை, நட்பு ரீதியிலான சந்திப்பு மட்டுமே என்று இருவரது தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
’சலார் 2’ அல்லது ஜூனியர் என்.டி.ஆர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறது தெலுங்கு திரையுலக வட்டாரம். ஏனென்றால் இருவரும் நட்பு ரீதியிலான சந்திப்புக்கு வாய்ப்பில்லை என்கிறார்கள்.