திருமண வதந்தி: விஜய் தேவரகொண்டா கிண்டல்

ராஷ்மிகாவுடன் திருமணம் குறித்த செய்திக்கு, விஜய் தேவரகொண்டா கிண்டலாக பதிலளித்துள்ளார்.

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவருமே காதலர்களாக வலம் வருகிறார்கள். இருவருமே அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், அவ்வப்போது இவர்கள் குறித்த செய்திகள் வலம் வந்த வண்ணமுள்ளன.

இதனிடையே, கடந்த சில தினங்களாக விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவருக்கும் பிப்ரவரி மாதத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகின. 

இந்தச் செய்தி குறித்து இருவருமே கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்ததால், உண்மையாக இருக்குமோ என்ற பேச்சும் நிலவியது.

இந்நிலையில், இந்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஜய் தேவரகொண்டா திருமணச் செய்தி குறித்த கேள்விக்கு “2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பத்திரிகையாளர்கள் எனக்கு திருமணம் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். 

ஒவ்வொரு ஆண்டுமே இந்த வதந்தி வந்துக் கொண்டு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இந்த முறையும் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா வந்தனா திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Read Previous

புதுமையான திரில்லர் டிராமாவாக உருவாகும் மெட்ராஸ்காரன்

Read Next

‘டாடா’ இயக்குநரின் புதிய திட்டம்

Most Popular