‘விடாமுயற்சி’ தாமதம்: தீபாவளியை உறுதிப்படுத்தும் ‘கங்குவா’

’விடாமுயற்சி’ தாமத்தினால், தீபாவளி வெளியீட்டியினை விரைவில் உறுதிப்படுத்த உள்ளது ‘கங்குவா’ படக்குழு.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘விடாமுயற்சி’. பல்வேறு தடங்கலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இன்னும் இறுதிகட்டப் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது. இதனால் அஜித் ‘குட் பேட் அக்லி’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

முதலில் ‘விடாமுயற்சி’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக இருந்தது. இதனால் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம் எப்போது வெளியீடு என்பது தெரியாமல் இருந்தது. இதற்காக ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் பல்வேறு தேதிகளை முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

தற்போது ‘விடாமுயற்சி’ தீபாவளி வெளியீடு இல்லை என்பது முடிவாகிவிட்டது. இதனால் ‘கங்குவா’ தீபாவளி வெளியீட்டை உறுதி செய்துள்ளது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பினை வெளியிடவுள்ளது. சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்குவா’. சுமா 400 கோடி ரூபாய் முதலீட்டைல் இந்தப் படத்தினை தயாரித்துள்ளது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்.

தீபாவளி வெளியீட்டினை ’கங்குவா’ படக்குழுவினர் உறுதிச் செய்திருப்பதால், சூர்யா ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Read Previous

சுதா கொங்காராவின் கதை: தயக்கம் காட்டும் ஹீரோக்கள்

Read Next

‘கூலி’ அப்டேட்: ரன்வீர் சிங் விலகல்?