சாய் பிலிம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் டெனிஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ட்ரிப்.
தலக்கோணாவில் 25 நாட்கள் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று முதல் கட்டத்தை நிறைவு செய்தது.
அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகி வருகிறது.
படம் பற்றி இயக்குனர் டெனிஸ் கூறுகையில்,
“முதல் கட்டப் படப்பிடிப்பின் போது பலத்த மழை, வெள்ளப் பெருக்கு என்று பல கடுமையான சவால்களை எதிர்கொண்டோம். ஆயினும் எந்தவித சமரசமும் இல்லாமல், நாங்கள் திட்டமிட்டபடியே படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்.
படப்பிடிப்பு நடக்கும்போது நாங்கள் சற்றும் எதிர்பாராமல் திடீரென புலி ஒன்று வந்துவிட்டதைக் கண்டுஅதிர்ச்சியடைந்தோம். ஆயினும் எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை.
படப்பிடிப்பில் சில சவால்கள் இருந்தாலும், யோகி பாபு மற்றும் கருணாகரன் இருவரது கலகலப்பான பேச்சும் செயல்களும், பணியின் சுமையைக் குறைத்து சுகமானதாக மாற்றியது. படத்தில் இவர்கள் வரும் பகுதி ரசிகர்களால் வெகுவாக வரவேற்கப்படும் என நம்புகிறேன்.
பிரவீண் மிகச் சிறப்பாக நடித்திருப்பதுடன் சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் துணிச்சலுடன் பணியாற்றியிருக்கிறார். ட்ரிப் திரைப்படம் சுனைனாவுக்கு நிச்சயமாக ஒரு திருப்பு முனையாக அமையும்.
வி.ஜெ.ராகேஷ், அதுல்யா சந்திரா, லட்சுமிப்ரியா, கல்லூரி வினோத், விஜே.சித்து, ஜெனிஃபர், மற்றும் ராஜேஷ் ஆகியோர் மிகச் சிறப்பாக நடித்திருக்கின்றனர்,” என்றார்.
‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்திற்கு இசையமைத்த சித்து குமார் இசையமைக்க, உதய ங்கர் ஒளிப்பதிவு செய்ய, தீபக் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
நவம்பர் இறுதியில் தலக்கோணா மற்றும் கொடைக்கானலில் முழுவீச்சில் படப்பிடிப்பை நடத்தி முடித்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.