‘கோட்’ படத்தில் இரண்டு தளபதி என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் ‘கோட்’. பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்தப் படம் தொடர்பாக படக்குழுவினர் எந்தவொரு தகவலையும் வெளியிடாமல் உள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இரண்டு விஜய் இருந்தது நினைவுக் கூரத்தக்கது.
இதனை வைத்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. தற்போது நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது ‘கோட்’ குறித்த கேள்விக்கு பிரேம்ஜி கூறியிருப்பதாவது:
“இரண்டு தளபதி… நீங்கள் பாருங்கள்… அடிச்சு துவம்சம்… வேற வெலவல்.. சொல்ல வார்த்தையில்லை. அதை கண்ணால் நீங்கள் பார்க்க வேண்டும். ஐ யம் வெயிட்டிங். சில வருடங்களுக்கு முன்பு வெங்கட்பிரபு படத்தில் தல பைக் ஓட்டினார். இப்போ தளபதி வேறொன்று பண்ணியிருக்கார். படம் வரும் போது பாருங்கள். இதற்கு மேல் பேசக் கூடாது. பிறகு ஏஜிஎஸ் நிறுவனத்திலிருந்து எங்கள் மீது வழக்கு போட்டுவிடுவார்கள்”
இவ்வாறு பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பது உறுதியாகிறது. முதன்முறையாக படக்குழு தரப்பிலிருந்து இதனை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.