வேந்தர் டிவி தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

வேந்தர் தொலைக்காட்சியில் , தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிளாகப் பல புதுமையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.

காலை 9:00 மணிக்கு சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது .நாட்டையே உற்று பார்க்கவைத்த உரத்த சிந்தனையாளர் சபரி மாலா ஜெயகாந்தன் அவர்களின் தலைமையில் சிந்தனையைத் தூண்டும் வகையில் முன்னணி பேச்சாளர்கள் கலந்து கொள்ளும் இந்த சிறப்பு பட்டிமன்றம் அறிவுக்கு விருந்தாகும் வகையில் ஒளிபரப்பாகிறது.

காலை 11 மணிக்கு, ஞானசுடர் பேராசிரியர் டாக்டர் ஜெயந்தா ஸ்ரீ பாலகிருஷ்ணன் தலைமையில் நடைப்பெற்ற ‘அறம் செய்வோம்’ என்ற பேச்சரங்கம் நல்லறங்களை வளர்க்கும் நேசமிகு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது . மக்களிடையே மனிதநேயம் தழைக்க வழிகாட்டும் நிகழ்ச்சியான ‘அறம் செய்வோம்’, தீபாவளி முதல் தொடர்ந்து ஒளிபரப்பாகிறது .

காலை 11:30 மணிக்கு ஒளிபரப்பாகும் முற்றிலும் மாறுபட்ட நகைச்சுவை நிகழ்ச்சி “நவீன நாட்டாமை” . நகைச்சுவை நாயகர்கள், முல்லை கோதண்டம் இணைந்து கிராமத்து நாட்டாமையாகத் தீர்ப்பு சொல்லும் வித்தியாசமான இந்த நிகழ்ச்சி தீபாவளியை கொண்டாடும் சிரிப்பு வெடியாக மலர்கிறது .

Read Previous

த்ரில்லர் படமாக உருவாகும் பிரஷாந்தின் ‘ஜானி’

Read Next

அருவி படத்தைப் பாராட்டிய சிவகார்த்திகேயன்

Most Popular