ஸ்டார் மூவீஸ் சார்பாக நடிகர் தியாகராஜன் தயாரிக்க ப. வெற்றிச் செல்வன் இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘ஜானி’.
பிரஷாந்த், சஞ்சிதா ஷெட்டி, பிரபு, ஆனந்தராஜ், சாயாஜி ஷின்டே, அஷுதோஷ் ரானா, தேவதர்ஷினி, கலைராணி, ஆத்மா, ஜெயக்குமார், சந்தியா, சங்கர் கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணமோகன், சுகந்தன், கலைமா சேகர் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் ‘ஜானி’ படத்தின் படப்பிடிப்பு மூன்று கட்டமாக 77 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
விறுவிறுப்பான திரைக்கதையோடு சஸ்பென்ஸ் மற்றும் சண்டைக் காட்சிகள் நிறைந்த த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது.
சென்னை, பெங்களூர், ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் படத்தின் வசனப் பகுதிக்கான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் பாடல் காட்சிகள் மட்டும் படமாக வேண்டி உள்ளது.
பாடல் காட்சிகளை கனடா, மொரிஷீயஸ் தீவுகளில் படமெடுக்க உள்ளார்கள்.
பிரபு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் பிரஷாந்த் ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். காமெடி கலந்த வில்லனாக ஆனந்தராஜ் நடிக்கிறார்.
சாயாஷி ஷின்டே, அஷுதோஷ் ரானா மாறுபட்ட வேடத்தில் நடிக்கின்றனர். நடிகர்கள் ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர்.
‘நான், எமன்’ படங்களை இயக்கிய ஜீவா சங்கரிடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய ப. வெற்றிச் செல்வன் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
‘ஜானி’ படத்திற்கு மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளார்கள். அவர்கள் யார், யார் என்பது இசை வெளியீட்டு விழாவில் அறிவிக்கப்பட உள்ளார்கள்.
படத்தின் டப்பிங் வேலைகள் முடிந்துள்ள நிலையில், பாடல் காட்சிகள் படமானதும் படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.