விஜய் டிவியில் 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ‘சகல Vs ரகள’ நிகழ்ச்சி ஜுலை 22ம் தேதி, ஞாயிறு முதல் பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிகழ்ச்சியை விஜய் டிவியின் சமீபத்திய காமெடி ஸ்டார் ராமர் மற்றும் ‘ரெடி ஸ்டெடி போ’ நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆண்ட்ரூஸ் ஆகியே இருவரும் தொகுத்து வழங்குகிறார்கள்.
ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சியில் நான்கு நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்களுடன் கலகலப்பான சில விளையாட்டுக்களும், காமெடி கொண்டாட்டங்களும் இடம் பெற உள்ளது.
சுமார் 15 வருடங்களுக்கு 2003ம் ஆண்டில் சந்தானம், சின்னி ஜெயந்த் இருவரும் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ‘சகல Vs ரகள’. அப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் தன் திறமையை வெளிப்படுத்திய சந்தானம், தொகுப்பாளராகப் பணியாற்றிய முதல் நிகழ்ச்சி ‘சகல Vs ரகள’. அதன் பின்னர்தான் சந்தானம் பிரபலம் அடைந்து சினிமாவுக்குள் வந்து நகைச்சுவை நடிகராகவும், நாயகனாகவும் உயர்ந்தார்.
அன்று சந்தானத்திற்குப் பெரிய திருப்புமுனையைக் கொடுத்த அந்த நிகழ்ச்சி இன்று ராமருக்குத் திருப்புமுனையைத் தருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.