‘தேவி’ படத்திற்குப் பிறகு, மீண்டும் தமிழில் பிஸியாகி உள்ளார் பிரபுதேவா.
தற்போது ‘லட்சுமி, யங் மங் சங், சார்லி சாப்ளின் 2’ ஆகிய படங்களிலும், பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
அந்தப் படங்களுக்குப் பிறகு அவருடைய நீண்ட நாள் உதவியாளர் ஏ.சி. முகில் இயக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார்.
இப்படத்தின் தலைப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இமான் இசையமைக்க உள்ள இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடிக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடைப் பெற்று வருகிறது.
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நடிக்கும் பிரபுதேவாவின், முதல் போலீஸ் கதாபாத்திரமாக இந்தப் படம் அமைகிறது.